மத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு 10,000 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை செலுத்தியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் எனப்படும் நிலைவைத்தொகையை மத்திய அரசுக்கு உடனடியாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி ஏர்டெல் நிறுவனம் 10,000 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. பாக்கி தொகையை நிறுவனத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த பின்னர் செலுத்துவதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் மொத்தமாக மத்திய அரசுக்கு 35,586 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.

மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனமான வோடோபோன் மத்திய அரசுக்கு 50,000 கோடி ரூபாய் நிலுவைத்தொகை செலுத்த வேண்டியுள்ளது. இதனை தர அவகாசம் வேண்டும் என அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. ஆனால், இதனை நிராகரித்த நீதிமன்றம் நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

What do you think?

வதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்

‘சம்மதித்தால் இருவருடனும் வாழ்வேன்’! – காவலர் மீது மனைவி புகார்