வாரணாசியில் களமிறங்கிய அஜய் ராய்..!! மோடிக்கு வைத்த ட்விஸ்ட்..!! அட அதுவும் போச்சா..?
இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல்கட்ட வாக்குபதிவு வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2014, 2019 தேர்தல்களில் ஏற்கனவே வாரணாசியில் வெற்றி பெற்ற நிலையில் 3வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
மோடிக்கு போட்டியாக அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் போட்டியிடுகிறார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக உள்ள அஜய் ராய் இதற்கு முன் 2014, 2019 ல் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கி தோல்வியடைந்தார். ஆனால் தற்போது 3வது முறையாக பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அஜய் ராய் பாஜகவில் இணைய போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜய் ராய் வருகிற லோக்சபா தேர்தலில், பலியா தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கட்சியின் வேட்பளார் களம் இறக்கப்பட்டுள்ளார் .
பலியா தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி விட்டு கொடுக்க முயன்றதாகவும், அதையடுத்து அஜய் ராய் மீண்டும் வாரணாசியில் போட்டியிட வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அஜய் ராய் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அஜய் ராய் பாஜகவில் இணைவதாக வெளியான தகவல்கள் வதந்தி என அஜய் ராய் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛ பாஜக என்பது அரசியல் மற்றும் சமூகத்தை பின்பற்றி எதிர்க்கட்சி தலைவர்களை தேர்வு செய்து கட்சியில் இணைக்கிறது.
ஆனால் நான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டன். இந்திராகாந்தியின் மீது இருந்து பற்றால் இணைந்தேன், நான் எப்போதும் அப்படியே தான் இருப்பேன். மதுராவுக்கு சென்று இன்று “இந்தியா கூட்டணி” வெற்றி பெற பிரார்த்தனை செய்தோம்.
லோக்சபா தேர்தலில் வலிமையை நிரூபிப்போம். நாங்கள் சிவபெருமானின் பக்தர்கள். அவரின் ஆசீர்வாதம் எங்களுக்கு உள்ளது. உத்தர பிரதேசத்தில் இருந்து பாஜகவை அகற்றப்படுவதை தேர்தலில் உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..