ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்? விஜய் இடத்தை நிரப்ப ஆர்வமா?
இணையாமல் இருக்கும் அஜித்-ஷங்கர் கூட்டணி:-
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். இவர், அர்ஜூன், பிரபுதேவா, கமல், பிரசாந்த், விக்ரம், ரஜினி, விஜய் என்று பல்வேறு நடிகர்களுடன் கூட்டணி வைத்து, பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
ஆனால், இதுவரை, நடிகர் அஜித்துடன் இணையவே இல்லை. தற்போது, அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.
அஜித்தின் தற்போதைய லைன் –அப்:
துணிவு என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ள அஜித், விடாமுயற்சி என்ற படத்தில் கமிட் ஆனார்.
ஆனால், அப்படத்தின் அறிவிப்பு வெளியானதோடு சரி, வேறு எந்தவொரு சிறிய அப்டேட் கூட, இன்று வரை வெளியாகாமல் இருக்கிறது.
இதற்கிடையே, விடாமுயற்சியை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில், நடிக்க தொடங்கிவிட்டார். இப்போது, இந்த இரண்டு படங்களிலும், ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அஜித்தின் நடவடிக்கையில் மாற்றம்:
அஜித் பொதுவாக, ஒரு படத்தை முடித்துவிட்டு, அது ரிலீஸ் ஆன பிறகு தான், அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையிலேயே இறங்குவார்.
ஆனால், தற்போது ஒரே சமயத்தில் இரண்டு படத்தில் இவர் நடித்து வருதை பார்த்த ரசிகர்களும், சினிமா வட்டாரமும் ஆச்சரியத்தில் இருந்து வருகின்றன.
விஜய் தான் காரணம்?
இதனால் ஆச்சரியம் அடைந்த பத்திரிகையாளர்கள் சிலர், நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்துள்ளனர். அவ்வாறு வந்த தகவலின்படி, நடிகர் விஜய் இன்னும் இரண்டு படங்களில் நடித்துவிட்டு, அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.
இதனால், அவருக்கான இடம் காலியாக உள்ளது. எனவே, அந்த இடத்தை தன்னால் முடிந்தவரை நிரப்புவதற்கு, அஜித் முயற்சி செய்து வருகிறாராம். அதாவது, பல்வேறு பெரிய இயக்குநர்களிடம், அவரே செல்போனில் அழைப்பு விடுத்து, வாய்ப்புகளை கேட்டு வருகிறாராம்.
ஷங்கர் – அஜித்
இவ்வாறு அழைப்பு விடுக்கும்போது தான், ஷங்கர்-அஜித் இருவரும் பேசியுள்ளனர். அவ்வாறு பேசும்போது, கூட்டணி குறித்து பேசியுள்ளார்களாம்.
எனவே, இவர்கள் இரண்டு பேரும் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படத்தில், இணைய இருப்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
எந்த மாதிரியான கதை
இந்தியன் 2, 3 ஆகிய படங்களை ரிலீஸ் செய்துவிட்டு, வேள்பாரி நாவலை தான் திரைப்படமாக எடுக்க இருப்பதாக சொல்லப்பட்டது.
எனவே, அஜித் வேள்பாரியில் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அல்லது, அஜித்திற்காக வேறு புதிய கதையை, ஷங்கர் எடுப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று, தகவல் கசிந்திருக்கிறது.
-பவானிகார்த்திக்