விபத்தில் சிக்கிய அஜித்; வைரலாகும் வீடியோ – #GetWellSoonThala

நடிகர் அஜித்குமார் வலிமை பட சூட்டிங்கில் கலந்துகொண்டபோது பைக் விபத்தில் சிக்கியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தல என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார், சிறந்த பைக் ரேஸரும் ஆவார். இவர் பைக், கார் ரேஸ்களில் பங்கேற்று பல பரிசுகளையும் வென்றுள்ளார். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட அஜித் பைக் விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்த விபத்தில் நடிகர் அஜித் குமாருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. இதையறிந்த அவரது ரசிகர்கள், #GetWellSoonThala என்ற ஹேஷ்டேக் மூலம் அஜித்துக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

வெளியானது ரஜினியின் மேன் vs வைல்ட் மோஷன் போஸ்டர் – #ThalaivaOnDiscovery

15 கோடி மதிப்பீட்டில் புதிய ஹஜ் இல்லம் – முதலமைச்சர் அறிவிப்பு