சர்கார், பிகில் இரண்டையும் TRP-இல் துவம்சம் செய்த விஸ்வாசம்!

விஜய்யின் சர்கார், பிகில் படங்களை அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் TRP ரேஸிலும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் வெற்றி வாகை சூடியது. இதேபோல் விஜய்யின் சர்கார், பிகில் படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றது. இந்நிலையில் இம்மூன்று படங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டப்போது கிடைத்த TRP -யை தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அஜித்தின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு அஜித்தின் விஸ்வாசம் படத்தையும், விஜய்யின் பிகில் படத்தை பொங்கல் தினத்தன்றும் சன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பியது. இப்படங்கள் ஒளிபரப்பானபோது இருந்த TRP யை தற்போது BARC Data வெளியிட்டுள்ளது. அதில் விஸ்வாசம் முதல் இடத்திலும், விஜய்யின் சர்கார் 2வது இடத்திலும், பிகில் 3வது இடத்திலும் உள்ளன.

இதனை, தலையே TRP king என்றும் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. டாப் 5 லிஸ்ட் இதோ:- விஸ்வாசம் – 1,81,43,000, சர்கார் – 1,76,96,000, பிச்சைக்காரன் – 1,69,06,000, சீமராஜா – 1,67,66,000, பிகில் – 1,64,73,000

What do you think?

நயன்தாராவை மிரட்டிய ஜக்கி வாசுதேவ் கும்பல்?

‘பார்க்கிங்’ பணிக்கு குவிந்த பட்டதாரிகள்!!!