நடிகர் அஜித்தின் 62-வது திரைப்படம் குறித்து சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், அதனை லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து, அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ எடை குறைக்க திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைந்திருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அஜித்தின் 62-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில்,
அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாகவும், அடுத்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இப்படத்தை வெளியிட இருப்பதாகவும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் டபுள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் இந்த தகவல் இணையத்தில் காட்டு தீ போல பரவி உள்ளது.