மது அருந்துவதால் உடல் உறுப்புகளுக்கு வரும் பாதிப்புகள்..!
இதயம்:
ஆல்கஹால் இதய தசைகளை பாதித்து சீரற்ற இதயதுடிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகளை ஏற்ப்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம், இதயம் செயலிழப்பு ஆகிய பாதிப்புகளை ஏற்ப்படுத்துகிறது.
மூளை:
மது மனிதனின் மூளைக்கு சென்று மூளையின் செயல்திறனை குறைத்து நினைவிழப்பு மற்றும் மூளையில் பாதிப்பு ஏற்ப்படுத்தும்.
தொண்டை:
ஆல்கஹால் சாப்பிடுவோருக்கு தொண்டையில் அடைப்பு, உணவு குழாயில் புண் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும்.
கல்லீரல்:
மது கல்லீரலில் சென்று அதன் செல்களை பாதித்து கல்லீரல் சுருக்கம், பேட்டி லிவர் ஆகிய பிரச்சனைகளை ஏற்ப்படுத்தும்.
வயிறு:
மனிதனின் வயிற்றுக்குள் செல்லும் ஆல்கஹால் இரத்தத்தில் கலந்து ஊட்டச்சத்து குறைபாடு, இரைப்பையின் சுவருகளை பாதித்து வயிற்று புண்களை உண்டாக்குகிறது.