“All eyes on Rafah” கோபத்தில் உலக நாடுகள்..! சிக்கிய இஸ்ரேல்..! ரஃபாவில் நடந்தது என்ன..?
All eyes on Rafah – இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தை இதுதான். பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தரும் விதமாக உலகின் பல்வேறு நாடுகள் குரல் கொடுத்து வருகிறது. ஆனால், இந்த All eyes on Rafah என்றால் என்ன.. என்று பலருக்கும் தெரியவில்லை.
All eyes on Rafah எப்படி உருவானது..? அதன் பின்னணி என்ன என்பது பற்றி முதலில் பார்ப்போம். இஸ்ரேல் காசா இடையே ஒரு வருடமாக மோதல் நடைபெற்று வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை இஸ்ரேல் ஓயப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக காசாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஹமாஸ் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. முன்னதாகவே, வடக்கு காசாவில் தனது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில், அடுத்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் தாக்குதல் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், ரஃபா என்பது பாலஸ்தீன மக்கள் அதிகம் வாழும் ஒரு நகரம். காசாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இதுவரை சுமார் 50%, அதாவது 10 லட்சம் பேர் அங்கு வசித்து வருகின்றனர். இந்த ரஃபா நகர் எகிப்து எல்லையை ஓட்டி அமைந்துள்ளது. அங்கு பல அகதிகளுக்கு முகாம் உள்ளது என சொல்லலாம்.
இதனால் ரஃபாவில் தாக்குதல் நடத்தினால் அது பேரழிவைத் தரும் என உலக நாடுகள் எச்சரிக்க தொடங்கியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசி வந்த அமெரிக்கா கூட, ரஃபா மீது தாக்குதல் நடத்த கூடாது என இஸ்ரேலை எச்சரித்தது.
அதேபோல சர்வதேச நீதிமன்றமும் காசா பிராந்தியத்தில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியது. ஆனால் இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலின் ஏவுகணைகளில் ஒன்று ரஃபாவில் உள்ள புலம்பெயர்ந்த மக்களின் முகாமை தாக்கியது. அந்த தாக்குதலில் 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் அதில் காயமடைந்தனர்.
அதன் பின் இந்த சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த தொடங்கியது. ஐநாவின் UNRWA அமைப்பு அந்த இரண்டு கொடூர தாக்குதல்கள் குறித்தும் பல கருத்துகளை வெளியிட்டது. அதில் அவர்கள் கூறியதாவது. அதன் பின் காசா மக்கள் தாக்குதலில் இருந்து தப்பித்துப் பிறநாடுகளுக்கு செல்ல முயன்றனர்.
முதலில் தெற்கு ரஃபா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஹமாஸை சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதன் பின் உலகெங்கும் மிகப் பெரியளவில் எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கியது. அகதிகள் முகாமில் தாக்குதல்கள் நடத்தியது அதற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தது.
இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ரஃபா தாக்குதலில் துரதிஷ்ட வசமாக பலரும் உயிர் இழந்துள்ளார்கள்.
பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் எங்களை மீறி இது நடந்துவிட்டது.
இந்தத் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்தே All eyes on Rafah என்ற சொற்றொடர் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளது. உலக சுகாசார அமைப்பின் காசாவுக்கான பிரதிநிதியான ரிச்சர்ட் பீபர்கார்ன் என்பவர் All eyes were on what is happening in Rafah என்று கூறியிருந்த நிலையில், அதில் இருந்த இந்த All eyes on Rafah என்ற சொற்றொடர் உருவாகி இருக்கும் என்று கூறப்படுகிறது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..