“அனைத்து மத வழிபாடு சுதந்திரம் தொடர்பாக விசாரிக்கப்படும்” – உச்சநீதிமன்றம் அதிரடி

சபரிமலை மட்டுமின்றி அனைத்து மத வழிபாடு சுதந்திரம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

சபரிமலை தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமா்வு விசாரிக்கலாமா? என்பது குறித்து வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலை விவகாரத்தில் 5 நீதிபதிகள் எழுப்பிய 7 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தும் என தெரிவித்துள்ளது.

மேலும், மத விவகாரத்தில் எந்த அளவுக்கு பொதுநல வழக்குகள் தொடுக்க அனுமதி என்பதை குறித்தும் விசாரிக்கப்படும் என்றும், பெண்களுக்கான மத வழிபாட்டு உரிமை, சுதந்திரம் குறித்து விசாரிக்க உள்ளோம் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார். சபரிமலை விவகாரத்தை 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது சரியே என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 9 நீதிபதிகள் அமர்வு நாளை மறுநாள் முதல் விசாரணை நடத்தும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

What do you think?

இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு! : இலங்கை அமைச்சர் வலியுறுத்தல்

சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம்..!