தமிழக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமெடுத்துள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதனால்.மக்கள் பொதுவெளியில் ஒன்றுகூட வேண்டாம் எனவும், தேவையில்லாத பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து எல்லைகளும் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து சாலை வழியாக எந்த வாகனத்தையும் அனுமதிக்கப்படாது என்றும், அவசர தேவையென்றால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What do you think?

ஐபிஎல் குறித்து அடுத்த மாதம்தான் முடிவு எடுக்கப்படும்

தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம்!