ADVERTISEMENT
தஞ்சாவூர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!
தஞ்சாவூர் மாவட்டம் காவேரி உரிமை மீட்பு குழு சார்பில், நிலப்பரிப்பு சட்டத்தை நீக்க வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை ரயில் நிலையத்தில் செய்யாறு மூன்றாம் அழகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும், அதற்கு விவசாயிகளிடம் இருந்து பல்வேறு வடிவங்களில் பறித்த நிலங்கள் அனைத்தையும் விவசாயிகளிமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி உரிமை மீட்பு குழுவின் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.