கார்கே வைத்த குற்றச்சாட்டு; பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு..!!
ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரயில் விபத்தில், இதுவரை 288 பேர் உயிர் இழந்துள்ளனர், மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, கார்கே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ரயில்களில் பாதுகாப்பு உபகரணங்கள் பொறுத்த வேண்டும். பல பணியிடங்கள் காலியாக உள்ளது, அதில் பலருக்கும் வேலை கொடுக்க வேண்டும். என இதுபோன்ற 10 கேள்விகளை அதில் எழுதியுள்ளார்.
இந்நிலையில் சதானந்தகவுடா, தேஜஸ்வி சூர்யா, பிசி மோகன், மற்றும் முனுசாமி உட்பட 4 பாஜக எம்.பி.க்கள் கார்கேவின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ளனர்.
பாஜக எம்.பி.க்கள் எழுதிய பதில் கடிதம் இது சாத்தியமானது அல்ல. அது எதுவும் உண்மையும் அல்ல குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் வார்த்தையில் தான் உள்ளது, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து சில கேள்விகள் நீங்கள் எழுப்பியுள்ளீர்கள்.
கடந்த 9 ஆண்டில் மட்டும், மொத்த பாதுகாப்புச் செலவு 1,78,012 கோடி ஆகும். உங்கள் காலத்தில் 2.5 மடங்கு வரை இது உயர்த்தப்படும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் மிகவும் மோசமாக செயல்பட்ட பிறகு, ரயில்வே பாதுகாப்பு குறித்து அதை விரிவு செய்ய எங்களுக்கு தோன்றிய எண்ணம் மிகவும் வேடிக்கையானது.
ஒரு முன்னாள் ரயில்வே அமைச்சராக கட்டாயம் உங்களிடம், சூழ்நிலையை புரிந்துக்கொள்ளும் பகுத்தறிவு திறன் உங்களுக்கு இருக்கும். 2004 – 2014 வரை நீங்கள் ரயில்வே அமைச்சராக இருந்து இருக்கலாம்.
ஆனால் தற்போது நீங்கள் கேட்கப்படும் அனைத்து கேள்விகளும் சம்மந்தம் இல்லாதது, இந்த விபத்துக்கான உண்மையான காரணத்தை அரசு விரைவில் கண்டுபிடிக்கும், அதுவரை எங்கள் மீது நீங்கள் வைக்கும் குற்ற பொய்யை உண்மை என பரப்ப வேண்டாம்.
என பா.ஜ.க எம்.பி.க்கள் பதில் கடிதம் எழுதியுள்ளனர்.