நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்தவரை அடித்துக் கொலை செய்தவருக்கு வலை வீச்சு…
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்தவரை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொன்னாபுரம் சத்யராஜ் நகரைச் சோ்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சோ்ந்த செங்கோட்டை மற்றும் அவரது நண்பர் குமார் இருவரும் ஊசிபாசி தயாரித்து ஊா்ஊராக கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இருவரும் குருவிகளையும், பறவைகளையும் உண்டி வில் கொண்டு வேட்டையாட வெளியூா் செல்வது வழக்கமாக கொண்டுள்ள நிலையில், உடுமலையை அடுத்துள்ள தாந்தோணி குமாரபாளையம் பிரிவு பகுதியில் காடைக் குருவிகளை வேட்டையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் சிலா், சேவல் திருடா்கள் ஊருக்குள் புகுந்துவிட்டதாகக் கூறி இருவரையும் மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனா்.
இதில் செங்கோட்டை, குமார் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவந்த செங்கோட்டை என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறை இது தொடர்பாக தாந்தோணியைச் சோ்ந்த செல்வகுமார் மற்றும் மூன்று நபர்களைத் தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
