கொரோனாவிற்காக தனி WebSite-யை உருவாக்கிய கூகுள் நிறுவனம்!

கொரோனாவின் துணை நிறுவனமான ஆல்பாபெட் வெரிலி நிறுவனம் கொரோனா வைரஸ் பற்றி பரிசோதனை, விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைக்காக தனி வெப்சைட்டை ஒன்றை உருவாக்கி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் 1, 70,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6, 526 பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக சீனாவில் 3, 213 பேரும், இத்தாலியில் 1, 809 பேரும் பலியாகியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலும் இந்த கொரோனா வைரஸால் 69 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கூகுளின் துணை நிறுவனமான ஆல்பாபெட் வெரிலி நிறுவனம் கொரோனா வைரஸ் பற்றி பரிசோதனை செய்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ளவும் தனி வெப்சைட்டை ஒன்றை உருவாக்கி உள்ளது.

தற்போது சோதனை முயற்சியாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டும் இந்த வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவோர், அமெரிக்க குடிமக்களாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். கூகுள் கணக்கு வைத்திருக்க வேண்டும். சுய விபரங்களை பகிர்ந்துகொள்வதற்கு கூகுளின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த விபரங்கள் அரசு துறைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும்.

மேலும் கொரோனா பரிசோதனை செய்ய நினைப்பவர்கள் அருகில் உள்ள நடமாடும் பரிசோதனை நிலையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுவர். ஒரு முறை பரிசோதனை செய்யப்பட்டால், அடுத்த சில நாட்களில் அவர்களுக்கு முடிவுகள் கிடைத்துவிடும்.

இது குறித்து வெரிலி நிறுவனம் கூறுகையில், “கலிபோர்னியாவில் அதிக பாதிப்பு இருப்பதால் தற்போது அங்கு இந்த வெப்சைட்டை தொடங்குகிறோம். இந்த வெப்சைட்டுக்கு ‘புராஜெக்ட் பேஸ்லைன்’ என பெயரவைத்துள்ளோம். இதில் கொரோனா பாதிப்பு பற்றிய புள்ளி விபரங்களும் இதில் சேகரிக்கப்படுகின்றன. கலிபோர்னியாவில் இந்த வெப்சைட் செயல்படும் விதத்தைப் பொறுத்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்றும் தெரிவித்துள்ளது.

What do you think?

‘கேரளாவில் மருத்துவரை தாக்கிய கொரோனா’ தனிமைப்படுத்தப்பட்ட 30 மருத்துவர்கள்!

தமிழ் பெண்ணை இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸி. கிரிக்கெட் வீரர்!