ஆரோக்கியமான பாலக்கீரை சாதம் இன்னிக்கு செய்ங்க..!
பாஸ்மதி அரிசி 1 கப்
பாலக்கீரை 1 கொத்து
பூண்டு 6 பற்கள்
இஞ்சி 1 துண்டு
எண்ணெய் 1 ஸ்பூன்
நெய் 1 ஸ்பூன்
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி இலை
சீரகம் அரை ஸ்பூன்
வெங்காயம் 2 நறுக்கியது
பச்சை மிளகாய் 4 நறுக்கியது
மஞ்சள்த்தூள் கால் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
கரம் மசாலா அரை ஸ்பூன்
தண்ணீர் தேவையானது
அரிசியை சுத்தம் செய்து அரை மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பின் அரிசியை சாதம் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு மிக்ஸியில் சுத்தம் செய்த பாலக்கீரை,பூண்டு,இஞ்சி,மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் சேர்த்து தாளிப்பு பொருட்களை எல்லாம் சேர்த்து தாளித்து பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் பாலக்கீரை விழுது, கரம் மசாலா சேர்த்து வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.
அத்துடன் வறுத்த முந்திரியை கடைசியாக சேர்த்து கிளறி விடவும்.
அவ்வளவுதான் ஆரோக்கியமான பாலக்கீரை சாதம் தயார்.