பூவை ஜெகனுக்கு எடப்பாடி கொடுத்த அல்வா..!! பூவையின் அடுத்த பிளான்..?
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் களைகட்டி வரும் நிலையில், அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது, இந்நிலையில் வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி சில முயற்சிகளை செய்து வருகிறார்..
அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதல் கட்சியாக புரட்சி பாரதம் உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.. அதிமுக கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சியாக செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி கூறியிருந்தார்.
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் :
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விழுப்புரத்தில் மனிதம் காப்போம் என்ற தலைப்பில் அதிமுக மற்றும் புபாக சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைய உள்ளது. இந்த மாநாடு, தேர்தல் கூட்டணிக்கான துவக்கமாக இருக்கிறது. புரட்சி பாரதம் கட்சியின் இந்த மாநாடு பலரது தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. என ஆளும் கட்சி மற்றும் மத்திய அரசை விமர்சித்து பேசியுள்ளார்..
சீட் கேட்ட பூவை ஜெகன்மூர்த்தி :
தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தி அதிமுக கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என 3 தொகுதிகளை விருப்பத் தொகுதிகளாக கேட்டுள்ளோம். அவரின் சொந்த தொகுதியான திருவள்ளூரை வலியுறுத்தி கேட்டுள்ளார். அந்தத் தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றி நிச்சயம் பெறுவோம் என கூறியுள்ளார்.
புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளுர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரட்சி பாரதம் கட்சிக்கு பாராளுமன்ற தொகுதியில் சீட் ஒதுக்கப்படாததால் புரட்சி பாரதம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு அண்மையில் முடிவடைந்த நிலையில், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது. மற்றும் தேமுதிகவுக்கு விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகளும் கொடுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மற்ற 33 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்த புரட்சி பாரதம் கட்சிக்கு லோக்சபா சீட் மறுக்கப்பட்டதால் பூவை ஜெகன்மூர்த்தி பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார். பூவை ஜெகன்மூர்த்தி கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலையில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
இதையடுத்து நம் மதிமுகமிற்கு பேட்டி அளித்திருந்த பூவை ஜெகன் மூர்த்தி பேசியதாவது, “ஒரு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த புரட்சி பாரதம் கட்சிக்கு கடைசியாக ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.
ஆரம்பத்திலேயே எடப்பாடி சீட் கொடுக்க மாட்டோம் என சொல்லி இருந்தால் நான் சுயேட்சையாக போட்டியிட்டு இருப்பேன். அவர் இப்படி அல்வா கொடுப்பார் என நான் நினைக்கவில்லை, தமிழ்நாடு முழுவதும் புரட்சி பாரதம் கட்சியினர் கொந்தளித்துவுள்ளார்கள்.
அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என எடப்பாடி எங்களை சமாதானம் செய்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாய்ப்பு அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உந்து சக்தியாக பாடுபடுவோம். இன்னும் மூன்று நாட்களில் அதிமுக பொதுச் செயலாளர் திருவள்ளூர் தொகுதிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். அதில் புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்களும், அதிமுகவிற்கு ஆதரவு தர உள்ளோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..