விஜயதாராணிக்கு அண்ணாமலை கொடுத்த அல்வா..!!
பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து போட்டியிட்டடு தேர்தலில் தோற்றால் எம்.பி பதவி, கவர்னர் பதவி அல்லது வாரியத் தலைவர் பதவி கிடைக்கும் என பலரும் நினைத்து கொண்டு சிலர் செயல் பட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
விஜயதாரணிக்கு சீட்டு தர மறுக்க காரணம் :
கடந்த மூன்று முறையாக தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜயதாரணி வெற்றி பெற்றபோது, குழுத்தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்திருந்தார் ஆனால், அது கிடைக்காமல் போனது, அதன்பின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்தார் ஆனால் அந்த பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது.
வருகின்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்த விஜயதாரணி பாஜக தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்தார். இதனால் விஜயதாரணியின் எம்.எல்.ஏ பதவி பறிபோனது.
வருகிற லோக்சபா தேர்தலில் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் எம்பி சீட்டு கேட்டுள்ளார், இந்நிலையில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் பாஜகவை வளர்த்தவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவருக்கு தான் கன்னியாகுமரி தொகுதி என பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜயதாரணிக்கு எம்.பி சீட் வழங்கப்படாத நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைய சீட் கேட்டுள்ளார், காங்கிரஸிலும் மறுத்துவிட்டதால் விஜயதாரணிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களிடம் விசுவாசமாக இருந்து கூட்டணி கட்சியாக செயல்படுபவர்களுக்கே ஒரு தொகுதி கொடுத்திருக்கும் பட்சத்தில், பிற கட்சியில் இருந்து பதவி விலகல் செய்து வருபவர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..