மாமல்லபுரத்தில் நடைபெற்ற அமெச்சூர் ஆணழகன் போட்டி…!

மாமல்லபுரத்தில் நடைபெற்ற அமெச்சூர் ஆணழகன் போட்டியில் முதல் இடத்தை பிடித்த ஆணழகனுக்கு மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் மாமல்லன் கிளாசிக்-2020 என்ற பெயரில் மாவட்ட ஆணழகன் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு மாவட்ட உடற்பயிற்சி கூடங்களை சேர்ந்த 250 பேர் பங்கேற்றனர். ஏழு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் என 21 பேர் ஆணழகன் போட்டிக்கு தேர்வாகி பரிசுகள் வழங்கப்பட்டது. அதில் முதல் இடத்தை பிடித்து செங்கல்பட்டு மாவட்ட ஆணழகனாக தேர்வு செய்யப்பட்ட தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பரிசும், பதக்கமும் வழங்கினர்.

அமெச்சூர் ஆணழகன் போட்டி…!

இந்த ஆணழகன் போட்டியினை சுற்றுலா வந்த பயணிகள் பலரும் கண்டு ரசித்தனர்.

What do you think?

கைலாசத்தை கட்டி முடித்து விட்ட்டேன் …!நித்யானந்தா

இராஜா முத்தையா பெயரை நீக்க வைகோ எதிர்ப்பு…!