அசத்திய மாற்று திறனாளி குழந்தைகள்…!!
76 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தேசியக்கொடி உடையுடன் ரேம்ப்வாக் செய்து அசத்தினர்.
குளோபல் ரைசிங் சேலஞ்சர்ஸ் அமைப்பு மற்றும் கேர் அமைப்பு இணைந்து 76 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தேசியக்கொடி உடையுடன் ரேம்ப் வாக் செய்யும் நிகழ்ச்சி சென்னை சின்னமலையில் உள்ள காவலர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தேசியக் கொடியுடன் ரேம்ப்வாக் செய்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிகழ்வினை லண்டன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதிகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி உதவிக்காக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் குளோபல் ரைசிங் சேலஞ்சர்ஸ் நிறுவனர் சாரிக்கா ஜெகதீஷ், கேர் அமைப்பின் நிறுவனர் கல்பனா குமார், துணை காவல் கண்காணிப்பாளர் குமரன் வழக்கறிஞர் கீதாப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..