அழகான சருமதிற்கு அசத்தலான டிப்ஸ் ..!!
சருமத்தில் பெரிய துளைகள் முக அழகை கெடுக்கும் வகையில் இருக்கும்.
சருமத்தில் பெரிய துளைகள் உருவாவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. நீர்ச்சத்து குறைபாடு தொடங்கி அதிக ரசாயனப் பயன்பாடு, ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம், பதட்டம், ஊட்டச்சத்து குறைபாடு, பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்பு, கரும்புள்ளிகள், அதிகப்படியான சீபம் சுரப்பு என ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இவற்றை சரிசெய்தாலே ஓரளவு சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
முகத்தில் பெரிய பெரிய துளைகள் இருப்பதில் நாளடைவில் குழி போன்று மாறிவிடும். இந்த பெரிய துளைகள் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அந்த பெரிய துளைகளோடு மேக்கப் போடும் போது பயன்படுத்தும் கன்சீலர், ஃபவுண்டேஷன் ஆகியவையும் துளைகளுக்குள் தங்கி விடும்.
இந்த பெரிய துளைகளைச் சரிசெய்ய வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் இயற்கையாகவே சருமத்தின் பெரிய துளைகளின் அளவைக் குறைக்க முடியும்.
ஒரே இரவில் பெரிய சரும துளைகள் மறையணுமா…? இதில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஏதாவது ஒன்று பயன்படுத்தி பாருங்கள் .
1. எலுமிச்சை – தேன் ஸ்கிரப்
தேவையான பொருள்கள் :
தேன் – 1 ஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்,
சர்க்கரை – கால் ஸ்பூன்,
பயன்படுத்தும் முறை :
மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும் ஒரு கின்னத்தில் சேர்த்து நன்கு கலந்து அதை அப்படியே முகத்தில் அப்ளை செய்து விரல்களால் வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள்.
10-15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் சருமத் துளைகளுக்குள் அடைத்துக் கொண்டிருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளியேற ஆரம்பிக்கும்.
இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர வேகமாக சருமத்துளைகள் அளவு குறைய ஆரம்பிக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..