பருவநிலை மாற்ற எதிர்ப்பு போராட்டத்துக்கு 71,000 கோடி – அமேசான் அறிவிப்பு

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட 71,000 கோடி ரூபாயை செலவிட போவதாக அமேசான் நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார் .

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் தலைவருமான ஜெப் போசஸ், பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போசஸ் எர்த் பண்ட் தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்,

மேலும் பருவநிலை மாற்றம் என்பது நமது பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான தெரிந்த வழிகளை அதிகரிக்கவும், புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அதற்காக 10 பில்லியன் டாலர் செலவிடுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் CAA எதிர்ப்பு போராட்டம்

மனுஷ்யபுத்திரனின் விளக்கத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி