ஆம்புலன்ஸை டிராக் செய்ய புதிய செயலி; ஆனாலும் ஸ்பீடு அதேதான்!

108 ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை டிராக் செய்ய 2 மாதத்தில் புதிய செயலி உருவாக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது பேசிய ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, 108 வாகனங்கள் தாமதமாக வருவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைக் காட்டிலும் தமிழகத்தில்தான் ஆம்புலன்ஸ் சேவை மிக விரைவாக வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மாநகராட்சிகளில் 82 நிமிடங்களிலும், கிராம பகுதிகளில் 135 நிமிடங்களிலும் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்று சேர்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்தார். தனியார் டாக்சி நிறுவனங்களான ஓலா, ஊபர் கால்டாக்சிகளை டிராக் செய்ய பிரத்யேகமாக உள்ள செயலி போன்று, ஆம்புலன்ஸ் வருவதை டிராக் செய்ய பதிய செயலி 2 மாதத்தில் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

விரைவில் 200 புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளிகளை இடமாற்றம் செய்ய தனியாக 60 ஆம்புலன்ஸ் சேவைகள் துவங்க உள்ளதாகவும் அப்போது கூறினார்.

What do you think?

கொரோனா மீட்புப் பணியில் இந்திய போர் விமானம்!

மனநிம்மதியை தேடும் கோடீஸ்வர பிச்சைக்காரர்! – கோவையில் ஓர் விநோதம்