மனித உரிமை மீறல் – இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை

2009 ஆம் ஆண்டு போரின் போது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ராணுவ தளபதியாக தற்போது பதவி வகிப்பவர் ஷாவேந்திர சில்வா, இவர் 2009 ஆம் ஆண்டு அந்நாட்டில் நடைபெற்ற விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரின் போது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அப்போரில் இலங்கை ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை வகித்த ஷாவேந்திர சில்வா, தமிழ் மக்களுக்கான மருத்துவ வசதியையும் மனிதாபிமான பொருட்களையும் நிறுத்தியதாக, 2013-ல் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உரிமை மீறல் குற்றச்சாட்டு பதிவானது.

இதையடுத்து, இலங்கை ராணுவ தளபதியாக பதவி வகித்து வரும் ஷாவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை உள்நாட்டு போரின் போது, செய்த குற்றங்களுக்காக ஷில்வாவை அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து இலங்கை அரசு விடுத்துள்ள வேண்டுகோளில், அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

What do you think?

கெஜ்ரிவால் பதவியேற்பும் மோடியின் வாரணாசி பயணமும்!

புலியை தில்லாக படம் பிடித்த தோனி – வைரலாகும் புகைப்படம்