‘கொரோனாவால் என்னால் இதை கூட செய்யமுடியவில்லை’ புலம்பும் டிரம்ப்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தன்னால் சில விஷயங்களை செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பியுள்ளார்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் தற்போது வரை 3,400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸின் பாதிப்பு உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் தன்னால் இதைக்கூட செய்யமுடியவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் என்னுடைய முகத்தை கூட நான் தொடக்கூடாது என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள், தனக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், மேலும் பொது மக்கள் கூடும் கூட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும்” அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பியுள்ளார்.

What do you think?

‘தொடரும் மரணம்’ சேலத்தில் நித்யானந்தாவின் சீடர் தற்கொலை!

‘நீ அந்த காலேஜ்ல தான படிக்கிற’ சென்னையில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து!