‘கொரோனா அச்சம்’ அமெரிக்க விசா நிறுத்தி வைப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமேரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 50 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் , அடுத்த 8 வாரங்கள் வைரசை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான தருணங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வெளிநாட்டு பயணிகளால் கொரோனா பரவலாம் என்பதால் வெளிநாட்டு பயணிகளை தடுக்கும் நடிவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது.

அந்தவகையில் வரும் மார்ச் 16ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவது நிறுத்தப்பட உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, விசா வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் தெரிவித்துள்ளன.

What do you think?

மிரட்டலாக வந்துள்ள கவினின் ‘லிப்ட்’ ஃபர்ஸ்ட் லுக்…..!

‘கொரோனாவின் கொடூரம்’ ஸ்பெயினில் 120 பேர் பலி!