கோபத்தின் உச்சியில் அமித்ஷா..!! அண்ணாமலை பதவிக்கு ஆப்பா..?
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்நிலையில் பாஜகவில் நடக்கும் மோதல்கள் குறித்து சில தகவல்கள் நம் மதிமுகமிற்கு கிடைத்துள்ளது.
பாஜகவை பொறுத்த வரையில் கட்சியில் இருந்து பலரும் வெளியே செல்வதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது, தேர்தல் முடிந்த பின் சிலர் பாஜகவை விட்டு வெளியேறி சென்றுள்ளனர்.
அதற்கு காரணம் நிறைய உள்ளது. என் மண் என் மக்கள் என்று அண்ணாமலை நடத்திய யாத்திரைக்கு பின் பெரிய அளவில் பாஜகவிற்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவிற்கு பூத் கமிட்டிகள் கூட இல்லை என சொல்லலாம்.
அடிப்படையாக பாஜக போட்டியிட்ட இடங்களில் எல்லாம் பூத் கமிட்டி இல்லை. அண்ணாமலை போட்டியிட்ட கோவையில் கூட பூத் கமிட்டிகள் இல்லை என சொல்லலாம், பாஜகவிற்கு இதனால் பெரிய பலன் இல்லாமல் போனது. அண்ணாமலையின் பாத யாத்திரையால் பாஜகவிற்கு பலம் கூடும் ஆதரவு கிடைக்கும் என நினைத்தார்கள்..,
ஆனால் பாஜக நினைத்ததற்கு நேர் மாறாக அமைந்துள்ளது.., என சொல்லலாம். குற்றப் பின்னணியில் ஈடுபட்ட சிலர் பாஜகவில் சேர்ந்தனர். ஆனால் அவர்கள் எல்லாம் தேர்தல் பணிகளை எல்லாம் சிறப்பாக செய்தனர். அவர்களுக்கு தேர்தலுக்கு பின் பணம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது..,
பாஜக மேலிடத்தில் இருந்து இறக்கப்பட்ட பணம் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டப்பட்டு கீழே செல்லவே அண்ணாமலை தலைமைக்காக வேலை பார்த்தவர்களுக்கு யாருக்கும் பணம் கிடைக்கவில்லை என சொல்லலாம், அதே சமயம் மக்களுக்கும் பண பட்டுவாடா செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பாஜக வாக்கு வங்கியை 10 சதவிகிதத்திற்கு மேல் அண்ணாமலை உயர்த்தினார் என பலரும் சொல்லுகிறார்கள்.., அவர்கள் சொல்லுவதை போல நடந்திருந்தால் அண்ணாமலைக்கு பிரச்சனை இல்லை. அண்ணாமலையை பாஜக மாற்றாது. இடம் வின் பண்ணாதது வேறு விஷயம். வாக்கு வங்கியை உயர்த்தினால் பாஜக அண்ணாமலையை விட்டு விடும்.
ஆனால் அமித்ஷா அண்ணாமலை மீது கோபமாக இருப்பதால் தான் கோவையில் அண்ணாமலைக்காக அமித் ஷா வேலை பார்க்கவில்லை என்றும் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் பாஜகவினர் கூறுகின்றனர்.
மற்றொரு பக்கம் அதிமுக – பாஜக கூட்டணி உடைத்ததை அமித் ஷா விரும்பவில்லை. அண்ணாமலை மீது அமித் ஷா வெறுப்பில் இருக்கிறார். இவ்வளவு சொல்லியும் அண்ணாமலை கேட்கததால் அமித் ஷா அண்ணாமலை மீது கோபமாக இருக்க காரணம் என பாஜக வட்டாரத்தில் அனைவரும் கூறுகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..