டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல் !

டெல்லி கலவரம் குறித்து இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சோனியா காந்தி கூறுகையில், டெல்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. அமித் ஷா இதற்கு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். உரிய நேரத்தில் செயல்பட தவறிவிட்டார். இதற்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பாஜக தலைவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். டெல்லி கலவரத்துக்கு பின்னணியில் பாஜகவின் சதி உள்ளது. டெல்லி போலீசார் செயல்படாமல் இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. டெல்லியின் முக்கிய அமைச்சர் எங்கே சென்றார், என்ன நடந்தது? மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏன்?

நாட்டின் உள்துறை அமைச்சர் எங்கே சென்றார்? டெல்லின் முதல்வர் எங்கே சென்று இருந்தார்?
உளவுத்துறையிடம் இருந்து என்ன தகவல் கிடைத்தது. அதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
வன்முறை பகுதியில் எவ்வளவு போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்? ஆகிய 4 முக்கிய கேள்விகளையும் சோனியா காந்தி எழுப்பியுள்ளார்.

நாளை ஜனாதிபதியை சந்தித்து அறிக்கை அளிக்க இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

What do you think?

இத்தாலியில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே இரவில் 283 அதிகரிப்பு !

டெல்லியில் அமைதியை நிலை நிறுத்துங்கள் – பிரதமர் நரேந்திர மோடி