‘ஹோலி கொண்டாட்டம் வேண்டாம்’ பிரதமர் வழியில் அமித்ஷா!

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 60 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த நோய் மெல்ல மெல்ல இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. மக்கள் கூட்டமாக இருக்கும் பகுதியில் இந்நோய் வேகமாக பரவுகிறது.

இந்த நிலையில் வர இருக்கின்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமரை போல உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்றும் குடும்பத்துடன் சேர்ந்து ஹோலியை கொண்டாடுங்கள் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார்.

What do you think?

சூர்யாவின் ‘அருவா’ ‘வேல்’ படத்தின் இரண்டாம் பாகமா?

இன்று மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!