அம்மன் கழுத்தில் இருந்த… போலீஸ் வலைவீச்சு..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி பகுதியில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் கோவிலுக்கு திறந்து பூஜை செய்வது வழக்கம். வெள்ளிக்கிழமை அன்று கோவிலை பூசாரி திறந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கத் தாலி சரடு திருடு போனது தெரிய வந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பரதராமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊருக்கு நடுவே இருந்த அம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்கச் தாலி சரடு திருடு போன சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்