சாக்லெட் கொடுப்பதாக கூறி 4 வயது சிறுமியிடம் அத்துமீறிய 11 வயது சிறுவன்..!
உத்தரபிரதேச மாநிலம் ஷரான்பூர் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகள் உள்ளார். சிறுமி தினமும் தனது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடுவது வழக்கம்.
இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றுவிட்டதால், இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை அறிந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 11 வயது சிறுவன், சிறுமிக்கு சாக்லெட் கொடுப்பதாக, ஆசை வார்த்தை கூறியுள்ளான். சிறுவன் கூறியதை கேட்ட அந்த சிறுமி, அவனை வீட்டின் உள்ளே அனுமதித்துள்ளார்.
பின்னர், அவன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதையடுத்து, பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சிறுமி சுயநினைவு இன்றி கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நடந்ததை குறித்து சிறுமியிடம் கேட்டுள்ளனர். பின்னர், சிறுமியை கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் , காவல்துறையில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். 4 வயது சிறுமியை, 11 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்