18வயது சிறுமி.. இருசக்கர வாகனத்தில் தரதரவென இழுத்து சென்ற கும்பல்..!
செல்போனுக்காக 18 வயது சிறுமி இருசக்கர வாகனத்தில் தரதரவென இழுத்து சென்ற கொடூர நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று 18 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சிறுமியிடமிருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்ட சிறுமியை அந்த கொடூரர்கள் 350 மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் சிறுமி வேறுவழியில்லாமல் செல்போனை கொடுக்கவும் சிறுமியை விட்டு சென்றனர்.
பின்னர் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.