ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து…!! நிம்மதி இல்லா இரயில் பயணம்..!! சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி..!!
ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது; ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே என சு.வெங்கடேசன் எம்.பி குற்றசாட்டு வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஒடிசாவில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்துக்கு பின்னர் கவாச் தொழில்நுட்பம் குறித்தும், அதை செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள்.
அதன் பின்னர் நேற்று இரவு மைசூரில் இருந்து ஆந்திரா வழியே தர்பங்கா செல்லும் “பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்” சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ரயில் எண் (12578), மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெரம்பூரில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்ட இந்த பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ் நேற்று இரவு 8.27 மணியளவில் கவரைப்பேட்டையை வந்தடைய வேண்டிய நிலையில் கால தாமதமாக நேற்று இரவு 9.24 மணிக்கு வந்துள்ளது.
அப்போது தண்டவாளத்தில் சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலின் பின்புறத்தில் அதிவேகமாக வந்து மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.. அந்த விபத்தில் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது..
மேலும் சரக்கு இரயில் தடம் புரண்டதில் சில பெட்டிகளில் தீ பற்றியுள்ளது.. அதே சமயம் பயணிகள் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. மற்றும் மூன்று பெட்டிகள் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில், 2 பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உருக்குலைந்துள்ளது. இதுவரை இந்த விபத்தில், 19 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.. ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது…
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை தொடர்ந்து ஒன்றிய இரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் சு. வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்..
“ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே. ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது…? உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும், ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது..? என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..