புதுக்கோட்டையில் ரத்த தானம் செய்யும் கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி!!!
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் செய்யும் கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கம் 34 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் இணைந்து அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தானாக முன்வந்து ரத்ததானம் செய்துள்ள கொடையாளர்களை பாராட்டு விதத்திலும், ரத்தம் தானம் செய்வது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் ரத்ததான கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 25க்கும் மேற்பட்ட ரத்ததான கொடையாளர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மணி அவர்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.