புதுக்கோட்டையில் நடந்த சமூக இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுன்ற உறுப்பினருமான வைகோ வலியுறுத்தி உள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூரில் உள்ள வேங்கை வாசல் தெருவில் வசிக்கும் பட்டியல் சமூக பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் கயவர்கள் சிலர் மலம் கழித்து வந்ததை வைகோ வேதனையுடன் சுட்டிக்காட்டி உள்ளார்
இந்த கொடூரக் குற்றத்தை செய்த அழுக்கு மனம் படைத்தோர் நாகரீக மனித சமூகத்தில் வாழவே தகுதி அற்றவர்கள் என தெர்வித்துள்ள வைகோ இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார்
இந்த சாதி ஆதிக்கக் கொடூரத்தை செய்த கொடியவர்கள் எவராக இருந்தாலும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தி உள்ளார்
அதே ஊரில் கோவிலுக்குள் பட்டியல் சமூக மக்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறை அதிகாரியும் பட்டியல் இன மக்களை கோவிலின் உள்ளே அழைத்துச் சென்று வழிபடச் செய்து தீண்டாமைக் கொடுமையை தகர்த்து உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ஊர்களில் தேனீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை பயன்படுத்தப் படுகின்ற கொடுமையும் நடப்பதாக வைகோ வேதனை தெரிவித்துளளார்
காலம் காலமாகப் புரையோடிக் கிடக்கும் சாதி ஆதிக்க வன்மம், ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீதான தீண்டாமை கொடுமை பல வகைகளில் தொடர்ந்து வருவது நாட்டிற்கே பெருத்த அவமானம் தலைக்குனிவு எனவும் வைகோ தெரிவித்துள்ளார்
தமிழக அரசு, சாதிவெறி கொண்டு அலையும் ஆதிக்கவாதிகளை இனம் கண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் இத்தகைய சமூக இழிவுகளை இனி எவரும் கனவிலும் நினைக்கக் கூடாத நிலையை தமிழ்நாட்டில் ஏற்ப்படுத்த வேண்டும் எனவும் வைகோ தமது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்