டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!!
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு இன்று நடைபெற்றது..
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு இன்று காலை 09.30 மணிக்கு தொடங்கியது. கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வில் விண்ணபிக்கலாம் என தேர்வாணையம் வெளியிடிருந்தது..
ஜூன் 2௦ம் தேதி தொடங்கி ஜூலை 19 வரை விண்ணப்பிபதற்கான கால அவகாசம் கொடுத்தது குரூப் 2-வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 507 பணியிடங்களும், குரூப் 2ஏ-வில் உதவி ஆய்வாளர், உதவியாளர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்களுக்காக 8 லட்சத்து 43 ஆயிரத்து 947 பேர் விண்ணபித்திருந்த நிலையில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 947 பேர் இன்று தேர்வு எழுதியிருந்தனர்..
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் II மற்றும் குரூப் – IIA) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் உடையார்பாளையம் வட்டாரங்களில் 29 தேர்வு மையங்களில் 8,800 தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர் இந்நிலையில் தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இத்தேர்வினை கண்காணிப்பிற்காக துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படை, 08 இயங்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுதவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.. அரியலூர் அரசு கலைக்கல்லூரிதேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ரத்தினாசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்..
அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வில் தொகுதி 2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகள் நடைபெற்றது மொத்தம் 43 தேர்வுக்கூடங்களில் 10,987 தேர்வர்கள் தேர்வு எழுதினர்..
இத்தேர்வுக்காக கூடுதல் சிறப்பு பேருந்து வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது மேலும் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..
குரூப் – 2 தேர்வின் விடைக்குறிப்பு இன்னும் 6 நாட்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..