இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? ஜாக்கிரதை மக்களே..!
கொலஸ்ட்ரால் இயற்கையாகவே நம் உடலில் உருவாகும் ஒரு கொழுப்பு வகையாகும். இது செல்களையும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் பக்கவாதம், இதய நோய்கள் வரக்கூடும். பெரும்பாலான நேரங்களில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் எந்த அறிகுறியும் தெரியாது. சில நேரங்களில் சில அறிகுறிகள் தெரியலாம்.
கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகள்:
தொடர் தலைவலி: கொலஸ்ட்ரால் அதிகமானால் ரத்த நாளங்கள் சுருங்கி மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கும் இதனால் தொடர்ச்சியான தலைவலி ஏற்படும்.
மார்பு வலி: மார்பு வலியானது இதய நோயின் அறிகுறியாகும். கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் தமனிகளில் பிளேக் படிந்து ரத்த ஓட்டம் தடையாகிறது, இதனால் மார்பு வலி உண்டாகும்.
தசை வலி: கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் காலில் இருக்கும் தமனிகள் பாதித்து கால் வலி உண்டாகும். இது இடுப்பிலிருந்து கால் வரை இருக்கும்.
மூச்சுவிடுவதில் கஷ்டம்: இதயம் தேவையான ரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு செலுத்த முடியவில்லை எனில் மூச்சுவிடுவதில் சிரமம் உண்டாகும்.
தோல் மாற்றங்கள்: கொலஸ்ட்ரால் தோலில் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தும். கண்களின் வெள்ளை நிறங்களும் மஞ்சளாகும்.
களைப்பு: கொலஸ்ட்ரால் உடலில் இருந்தால் உடலின் ஆற்றலை குறைத்து தொடர் களைப்பை உண்டாக்கும்.
உணர்வின்மை: கால் மற்றும் கைகளில் உணர்வின்மை இருப்பது கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதன் அறிகுறியாகும்.
கொலஸ்ட்ரால் அதிகமாவதின் காரணங்கள்:
கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் அது மரபணுக்களின் மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும். கொழுப்புள்ள இறைச்சி, முட்டை மஞ்சள் கரு, பால் பொருட்கள் மற்றும் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதின் மூலம் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். சரியான உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். புகைப்பிடிப்பதினால் ரத்த நாளங்கள் சுருங்கி கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். நீரிழிவு நோய் உடையவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பு உயிரை பறிக்கும் அபாயம் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.