சரித்திரம் படைத்த சாமானிய பெண்..! ஆச்சி மனோரமா 87..! 5 முதல்வர்களுடன் நடிப்பு..!
தஞ்சாவூர் மாவட்டம் ராஜ மன்னார் குடியில் பிறந்தார்.., இவரின் இயற்பெயர் கோபிசாந்தா. வசதியான குடும்பத்தில் பிறந்தாளும் இவரது தந்தை மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால். இவரின் தாய் இவரை அழைத்துக்கொண்டு காரைக்குடியில் உள்ள பள்ளத்தூர் என்ற கிராமத்தில் குடியேறினார்கள்.
ஆறாம் ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர். குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு அங்குள்ள செட்டியார் வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். அவர்கள் தாயாருடன் பலகார வியாபாரம் செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
12 வயதில் சினிமாவில் கால் பதித்தார். “பள்ளத்தூர் பாப்பா” என சிறு வயதில் மனோரமா செல்லமாக அழைக்கப்பட்டார். பின் நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு “மனோரமா” எனப் பெயர் சூட்டினார்கள் .
ஆரம்பத்தில் “வைரம் நாடக சபா” நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார்.., புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடக மன்றத்தில் சேர்ந்து 100கும் மேற்பட்ட நாடகத்தில் நடித்துள்ளார்.
மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள் மொழி திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார். பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.
பின் எம்.ஆர்.ராதா நாடக சபாவில் ஒரு நாடகத்தை அவரது தம்பி எம்.ஆர்.பாப்பாவுடன் சேர்ந்து படமாக தயாரித்தபோது அதில் ஒரு முக்கிய வேடத்தில் மனோரமா நடித்தும் அந்த திரைப்படமும் பாதியில் நின்றதால் கடைசியாக கவிஞர் கண்ணதாசன் இயக்கிய சொந்த திரைப்படமான “மாலையிட்ட மங்கை” என்ற படமே மனோரமாவின் முதல் திரைப்படமாக அமைந்தது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான க.நா.அண்ணாதுரை எழுதிய, இயக்கிய மற்றும் நடித்த நாடகங்களில் இவர் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியுடன் நாடகங்களிலும் நடித்துள்ளார்.
ம.கோ.ராமச்சந்திரன் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோருடன் இவர் படங்களில் நடித்துள்ளார், பின்னர் இருவரும் தமிழக முதல்வர்களாக மாறினர்.
முன்னாள் முதலமைச்சர் “எம்.ஜி.ராமச்சந்திரனுடனும்” அன்பே வா, படகோட்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ஆந்திராவின் முதல்வரான என்.டி.ராமராவ் உடனும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
அவர் தமிழ் படங்களில் 300 பாடல்களை, பெரும்பாலும் அவரே நடித்த திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பாடியுள்ளார். அவர் பாடிய முதல் பாடல் மகளே உன் சமத்து என்னும் திரைப்படத்தில் பாடியுள்ளார். அதற்கு ஜி.கே. வெங்கடேஷ் இசையமைத்துள்ளார்.
தர்ஷினம் (1970) படத்தில் டி. எம். சௌந்தரராஜன் உடன் கிளாசிக்கல் அடிப்படையிலான பாடலைப் பாடியுள்ளார்.
தாத்தாதாத்தா பொடி கொடு (மகளே உன் சமத்து)
வா வாத்தியார் (பொம்மலாட்டம்)
தில்லிக்கு ராஜானாலும் (பாட்டி சொல்லை தட்டாதே)
மெட்ராச சுத்தி பாக்க போறோம் (மே மாதம்)
தங்கையெனும் பாசக்கிளி (பாசக்கிளிகள்)
தெரியாதோ நோக்கு தெரியாதோ (சூரியகாந்தி)
பார்த்தாலே தெரியாதா (ஸ்ரீ ராகவேந்திரா)
1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.
2002ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது.
1988ம் ஆண்டு தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த துணை நடிகை விருது
1971ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
2015ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது.
புதிய தலைமுறை (தொலைக்காட்சி) சக்தி விருதுகள்..
ஒரு நடிகர் பேசும் வசனத்தை தற்போது உள்ள ரீலிஸ் மோக இளைஞ்சர்கள் மற்றும் வாலிபர்கள் நடித்து பேசி வீடியோ பேசுவது வழக்கமாகி விட்டது. ஆனால் ஒரு சில வசனங்கள் அது அவர் பேசினால் மட்டுமே சரி என சொல்ல வைக்கும் அளவிற்கு இருக்கும்.
இந்த படத்தில் வரும் “கண்ணம்மா – கம்னு கிட” என்னும் வசனம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் என சொல்லலாம்.., அதில் அவர் சீரியஸ் ஆக நடித்திருந்தாலும்., காண்போருக்கு நகைச்சுவை தூண்டும் விதமாக உள்ளது என சொல்லலாம்.
ஒரு தாயின் தவிப்பை உணர்த்தும் விதமாக வெளிப்படுத்திய வசனம் தான் இது.., “என் புள்ள நல்லா இருக்கானா..? வெற்றி கொடிகட்டு படத்தில் வரும் இந்த வசனம் பல தாய்மார்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
60ஸ் களின் கதா நாயகியாக., 70ஸ் களின் கதா நாயகி மற்றும் காமெடி நடிகையாக.., 80ஸ் களின் அம்மாவாக.., 90ஸ் மற்றும் 24 கிட்ஸ்களின் பாட்டியாக என நான்கு தலைமுறையினருடன் நடித்த ஒரே நடிகை “மனோரமா” மட்டுமே என சொல்லலாம். எனவே தான் இவரை அனைவரும் “ஆச்சி” என அன்போடு அழைக்கப்பட்டார்.
நம்மை பல வித பரிமாணங்களில் ரசிக்க வைத்த ஆச்சி மனோரமா அக்டோபர் மாதம் 10ம் தேதி 2015ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக நம்மை விட்டு பிரிந்தார்.
அன்றும் என்றும் நம் மனதில் நீங்காத நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் “ஆச்சி மனோரமா” பிறந்த தினம் இன்று. அவரை பற்றிய ஒரு தொகுப்பை எழுதியதில் மதிமுகம் பெருமை கொள்கிறது.
– லோகேஸ்வரி.வெ