ஆந்திராவில் வயலுக்கு வைத்திருந்த மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த 6 யானைகள் கொண்ட குழு பார்வதி மன்யம் மாவட்ட மக்களை அச்சுறுத்தி வருகிறது. பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், பாமினி மண்டலம், கத்ரகடா பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் கூட்டம் வந்தபடி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் யானைகளிடம் இருந்து தங்கள் விவசாய பயிர்களை காத்துகொள்ள விவசாய வயல்களில் மின் வேலி அமைத்திருந்தனர். இதனால் இன்று காலை மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் உயிரிழந்தன. மேலும் இரண்டு யானைகள் மயிரிழையில் உயிர் தப்பின.
இதேபோல் தமிழக ஆந்திர எல்லையில் யானைகள் கூட்டம் மாநில எல்லை வனப்பகுதியில் சுற்றி வருகிறது. இருமாநில வன அதிகாரிகளும் தங்கள் பகுதிக்குள் வரும் யானைகளை துரத்தி அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த மல்லனூர் கிராம பஞ்சாயத்து ஜீதுரு கிராமத்தில் வசிக்கும் உஷா (35) என்ற பெண்ணும்
மல்லனூர் ஊராட்சி சப்பாணிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் யானை தாக்கி உயிரிழந்தார்.
உஷா, சிவலிங்கம் ஆகியோர் யானை தாக்கி உயிரிழந்ததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். மல்லனூர் சுற்றுவட்டார கிராம மக்கள், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.