கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் எஸ்கேப் ஆன அண்ணாமலை..!! கடுப்பான ஆனா தொழிலாளர்கள்..
அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறியுள்ளார்.., அப்போது இது குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு அண்ணாமலை பதில் அளிக்காமல் “எஸ்கேப்” ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை நேற்று குன்னூரில் நடந்தது. முன்னதாக, நேற்று காலை 10 மணிக்கு இந்த பாதயாத்திரை துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது இதனால், தொண்டர்கள் பசி மயக்கத்தில் இருந்துள்ளனர்.
நேரம் ஆக ஆக பலரும் அங்கிருந்து கலைந்து செல்ல துவங்கினர். குன்னூர் பகுதியில் நேற்று மழை பெய்ததால், மிக குறைவானவர்களே பங்கேற்றனர்.
தெற்கு ரயில்வேயில் தற்போது அப்ரென்டீசாக பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அண்ணாமலையை சந்தித்து, தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதை அண்ணாமலை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றதால் அவர்கள் கடுப்பாகியுள்ளனர்..
பின்னர், அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு முறையாக பதில் கொடுக்காமல், ‘‘நான் தற்போது பாதயாத்திரை செல்வதில் பிசியாக இருக்கிறேன்’’ என அவர்களின் கேள்விகளை தவிர்த்து விட்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..