பொய் மட்டுமே பேசுபவர் அண்ணாமலை.. – எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்குதல்..!
திமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து பல்வேறு தேர்தல்களை சந்தித்தது. ஆனால், ஒரு தேர்தல்களில் கூட, இந்த கூட்டணியால் வெற்றியை பெற முடியவில்லை. இதனால், சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகியது.
இதையடுத்து, அதிமுகவினரும், பாஜகவினரும் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர். குறிப்பாக, அதிமுகவை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். சமீபத்தில் கூட அவர் பேசும்போது, எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உழைக்காமல் பொய் மட்டுமே பேசி பதவிக்கு வந்தவர் தான் அண்ணாமலை என்று விமர்சித்தார்.
மேலும், மற்ற கட்சிகளின் அடையாளத்தில் வெற்றி பெற்றுவிட்டு, ஆடுபவர்கள் தான் பாஜகவினர் என்றும் விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், மேலவையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற அதிமுக தேவைப்பட்டது என்றும், ஆனால், அவர்களுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதால், அதிமுக கெட்டதாக தெரிகிறதா என்றும், கேள்வி எழுப்பியுள்ளார்.
-பவானி கார்த்திக்