சவுக்கு சங்கர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது மீண்டும் ஒரு வழக்கு..!! நேதாஜி பேரவை கொடுத்த புகார்..?
யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பெண் காவலரை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4ம் தேதி கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து சென்னை, திருச்சி, ஊட்டி ஆகிய மாவட்டங்களிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கர் மருத்துவ பரிசோதனைக்காக கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வலது கையில் மீண்டும் கட்டு போடப்பட்டது.
அப்போது சிறையில் என்னை கொல்ல பலரும் முயற்சிப்பதாக அவர் கூறி அவர் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாக பரவியது.. மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின் கோவை சிறையில் இருந்து திருச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரது யூ டியூப் சேனலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறுக இழிவுபடுத்தும் வகையில் பேசி பலரிடம் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நேதாஜி பேரவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரை ஏற்ற அதிகாரிகள் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் 153, 153(A) (1) (a), 153(A)(1)(b) 506, 505(ll) மற்றும் இந்திய தண்டனை சட்டம் (IPC) ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுது.
ஏற்கனவே, சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் உள்ள பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது 8வது வழக்காக முத்துராமலிங்கர் பற்றி அவதூறாக பேசி ஜாதி கலவரத்தை தூண்டும் விதமாக பேசியது இன்னும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..