அயன் பட பாணியில் மீண்டும் ஒரு கடத்தல்..!! ஆசாமிகள் சிக்கியது எப்படி..?
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சட்டவிரோதமாக போதை பொருட்களை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தலைவாசல் பகுதியில் உள்ள மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆத்துார் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஸ்ரீராமஜெயம், பவுன்ராஜ் ஆகிய இரண்டு மளிகை கடைகளில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது,
இதனை தொடர்ந்து கடைகளில் இருந்த 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 600 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது