ஆம் ஆத்மிக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி..!! பரப்பான டெல்லி..!!
பிப்ரவரி 2023ம் ஆண்டு டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா மதுபான விற்பனை உரிமதாரர்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாகவும், மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதற்காகவும் கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து மார்ச் 16ம் தேதி 2024ம் ஆண்டு இதே மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின் அதே டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தநிலையில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு மற்றும் பணமோசடி வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 22ம் தேதி இரவு கைது செய்தப்பட்டார்.
இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் :
அதன் பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மார்ச் 31ஆம் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்தபோது மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 18-ம் தேதி வரை நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..