மாதுளை,கேரட் சேர்த்த கிரீமியான தயிர் சாதம்..!
தயிர் சாதம் உடலில் இருக்கும் செரிமான மண்டலத்தை சீராக்கி செரிமானத்தை எளிமையாக்குகிறது. அத்தகைய தயிர் சாதத்தை மேலும் சுவையாக எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- அரை கப் கெட்டியான தயிர்
- சாதம்
- காய்ச்சிய பால்
- உப்பு
- கொத்தமல்லி இலை
- ஒரு பச்சை மிளகாய்
- மாதுளை பழம்
- கேரட்
தாளிக்க
- கடுகு
- கருவேப்பிலை
- கடலை பருப்பு
- உளுந்தம் பருப்பு
- பெருங்காயத்தூள்
- இஞ்சி
- மூன்று வரமிளகாய்
செய்முறை:
ADVERTISEMENT
- தயிர் சாதத்திற்கு சாதம் குழைவாக இருந்தால் ரொம்ப சுவையாக இருக்கும், அதனால் சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு நல்லா மசித்து விட வேண்டும்.
- பின் அதில் கொஞ்சமாக காய்ச்சிய பால் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு கெட்டியான தயிர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்ததாக நறுக்கிய கொத்தமல்லி இலை, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட், மாதுளைப்பழம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- இது மட்டும் இல்லாமல் உங்களுக்கு விருப்பமான பழங்களை கூட சேர்க்கலாம் உதாரணமாக திராட்சை.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய இஞ்சி, வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து இதனை தயிர் சாதத்தில் சேர்த்து கிளறி விட வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான தயிர் சாதம் தயார். இதை செய்து குடுங்க தயிர் சாதம் சாப்பிடாதவங்க கூட சாப்பிடுவாங்க..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.