இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் தொப்பை போடாது…!
காய்கறிகள் மற்றும் பழங்கள்: இந்த வகையான உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் குறைந்த கலோரிகளையும் பெற்றிருக்கிறது. இதனை நீங்கள் டன் கணக்கில் சாப்பிட்டாலும் உங்களுக்கு உடல் எடை கூடாது. வயிற்றை நிரப்பியபடி வைத்திருக்கும்.
ஓட்ஸ்: ஓட்ஸில் குறைந்த கலோரிகளே இருப்பதால் இதனை உங்களின் காலை உணவில் சேர்த்துக் கொள்வது உங்களின் உடல் எடையை குறைக்க உதவும்.
பருப்பு வகைகள்: இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரதம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதனால் உடலில் எடை கட்டுப்படுத்தும்.
முட்டைகோஸ்: முட்டைகோஸில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் பயன்படக்கூடிய குறைந்த கலோரிகளையெ கொண்டுள்ளது.
வெள்ளரிக்காய்: 100 கிராம் வெள்ளரியில் 16 கலோரி மட்டும் தான் இருக்கிறது. இதில் நீர்ச்சத்து உள்ளது. உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.
ஆப்பிள் , ஸ்ட்ராபெரி: ஆப்பிளில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால் இது வயிறை நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை தராது. ஸ்ட்ராப்ரியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி உடல் எடையை குறைக்க அதிகமாக பயன்படும்.