மருதாணியில் மறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள்..!
மருதாணி மருத்துவ பொருள்களில் ஒன்று. இதனை அழவணம் மற்றும் மருதோன்றி எனவும் அழைப்பார்கள். பல ஆண்டுகளாகவே மருதாணி மருத்துவ பொருளாக பயன்பாட்டில் உள்ளது. மருதாணி வெளி மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது உடலில் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
உடல் சூடு சாதாரணமாக இருந்தால் அது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், கண் எரிச்சல் ஆகியவை இருக்கும். ஆனால் அதிக சூடாக இருந்தால் அது வெள்ளைப்படுதல், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை உண்டாகும். மருதாணி இந்த இரண்டு சூட்டையும் தணித்து உடலை குளிர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
மருதாணியை கைகளில் பூசி வர நகங்களில் வரும் நகசுத்தி சரியாகும். இது கண்களுக்கு தெரியாத கிருமிகளையும் அழிக்கவல்லது. உடலில் இருக்கும் சூட்டை குறைத்து,மனநோய் வராமல் காக்கிறது.
அம்மை நோய் வந்தவர்களுக்கு மருதாணியை அரைத்து கண்களின் மீது சிறிது நேரம் கட்டி வைப்பார்கள், இதனால் கண்களில் இருக்கும் வைரஸ் தாக்கம் குறையும். நரைமுடிக்கும் இதனை தடவி வரலாம். மருதாணியை அரைத்து கால்களில் தடவி வர பித்த வெடிப்புகள் குணமாகும்.
மருதாணியை வெந்தயம் மற்றும் புளி கலந்த நீரில் அரைத்து தலைமுடியில் பூசி ஊறவைத்து குளித்து வர நரைமுடி மறையும். உள்ளங்கால் ஆணி குணமாக மருதாணி, கற்பூரம், மஞ்சள், வசம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து, ஆணி இருக்கும் இடத்தில் கட்டி வர ஆணிக்கால் குணமாகும்.