ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி..!

நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக கூறிவரும் ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டசபை தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்தார். ஆனால் அவருடைய படங்கள்தான் வெளியாகி வருகிறதே தவிர அவர் அரசியலுக்கு வருவதாக தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே கருத்து தெரிவித்துவருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். அதற்காக முழு அளவில் ரஜினிகாந்துக்கு பின்னணியில் இருந்து பாஜக நிச்சயம் உதவும். ஆனால் பாஜகவில் நேரடியாக இணைந்தால் மக்களுக்கு என்மீது தவறான கண்னோட்டம் வந்துவிடும் என்பதால் பாஜகவில் இணைவதை ரஜினிகாந்த் தவிர்க்கிறார் என தெரிவிக்கின்றனர்.

ரஜினிகாந்தின் ஆலோசகர் தமிழருவி மணியன், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிடம் கருத்து தெரிவித்துள்ள அவர் தமிழகத்தில் ரஜினிகாந்துக்கு சாதகமான அலை வீசுகிறது எனவும், அவர் கட்சியை தொடங்கியதும் ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்தபட்டு அதன் பின்னர் செப்டம்பர் மாதம் முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க போவதாகவும் கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் தொடங்கப் போகும் கட்சியில் அதிமுகவின் 2 மூத்த தலைவர்கள் மற்றும் பல பிரபலங்களும் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What do you think?

பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட்..!

அரசு பணி இட ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் உத்தரவு