February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending சினிமா

வருமானவரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்

வருமான வரி சோதனை தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அர்ச்சனா கல்பாத்தி ஆஜரானார்.

பிகில் பட வருமானம், ஊதியம் தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக, அந்த படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 3 நாட்கள் நடைபெற்ற இச்சோதனையில் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் இருந்து 77 கோடி ரொக்கம், 300 கோடி ரூபாய் அளவுக்கு காசோலைகள், பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏ.ஜி.எஸ் நிறுவனத்திலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல், நடிகர் விஜய் வீட்டிலும் 2 நாட்களாக நடைபெற்ற சோதனையில் எந்த ஆணவங்களும் கைப்பற்றப் படவில்லை என வருமானவரித்துறை தெரிவித்தது. இந்நிலையில், வருமானவரித்துறை சோதனை தொடர்பாக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், ஏ.ஜிஎஸ் நிறுவன நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடர்பாக விஜய்யின் ஆடிட்டர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரான நிலையில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான அர்சனா கல்பாத்தி இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பொறியியல் கல்லூரிகளின் பரிதாப நிலை…!

superadmin

மோதலில் ஈடுபட்ட இந்திய, வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை

Digital Team

அசுர பலத்துடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி

Digital Team

“தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை” – வைகோ விமர்சனம்

Digital Team

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

Digital Team

அவிநாசி அருகே கோர விபத்து – 20 பேர் பலி

Digital Team
You cannot copy content of this page
Madhimugam