கடலூர் மக்கள் பரதேசிகளா..? மாந்தோப்பில் அயோடி தங்கர் பச்சன் சொன்னது..? வெளியேறிய தொண்டர்கள்..!!
பல வருடங்களாக பாமகவின் நிலைப்பாட்டை ஆதரித்து வரும் தங்கர் பச்சான், தற்போது அரசியலில் களம் இறங்கியிருப்பதால் அவருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “மொழி, இன உரிமைக்காக போராட்டம் நடத்திய பாமகவை பார்த்துதான் பாமகவில் இணைந்தேன், என்னுடைய செயல்பாட்டிற்கு பாமக ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் பாமகவில் சேர்ந்து கடலூரில் பாமக வேட்பாளராக போட்டியிடுகிறேன்.
இதில் எதவாது உள்நோக்கம் இருக்கிறதா என நமது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு..,
எந்த உள்நோக்கத்துடனும் நான் அரசியலுக்கு வரவில்லை. என்னுடைய மண், மொழி, இனம், மக்களுக்கு எந்தவொரு சிக்கல் வந்தாலும் முதல் ஆளாக நான் வந்து நின்று போராடுவேன்.
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.. அண்ணா, பெரியார், அம்பேத்கர் போட்டோக்களை வைத்து மற்ற கட்சிகள் அரசியல் என்ற பெயரில் தொழில் செய்கிறார்கள். ஆனால், அம்பேத்கர் கொள்கைகளையும், பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் யாரும் கொண்டு செல்வதில்லை. ஆனா நாங்க அப்படி இல்லை நம் தலைவர்களின் கொள்கைளை பின்பற்றி வருகிறோம்.
பாமக சார்பில் கடலூரில் போட்டியிட ஒரே காரணம், என்னை வாழ வைத்த ஊர் கடலூர். நான் சினிமாவில் இருந்த போது, நான் அதிகமாக கடலூரில் தான் சூட்டிங் நடத்தினேன். 2மணி நேரம் படத்திற்காக ஆதரவு தந்த மக்கள் எனக்காக அரசியலுக்கு ஆதரவு தர மாட்டார்களா..? அதனால் தான் கடலூரை தேர்வு செய்தேன்.
நான் 7 வயதில் பார்த்த கடலூர், 62 வயதிலும் அப்படியேதான் இருக்கிறது.. எத்தனை எத்தனை தேர்தல்கள் வந்தாலும், எத்தனை எத்தனை தலைவர்கள் வந்தாலும், என்னுடைய மக்கள் எப்பவுமே பரதேசியாகவே இருக்கிறார்கள்.., சில அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து போகிறார்கள் அந்த கோபத்தின் வெளிப்பாடாகவே நான் இப்போது வேட்பாளராக நிற்கிறேன்.
அரசியல் கட்சி தலைவர்கள் வழங்கும் இலவச பொருட்களை வாங்க மறுக்க வேண்டும். மக்கள் சின்னத்தைப் பார்த்து வாக்களிக்காமல், தகுதியை பார்த்து வாக்களியுங்கள். மக்களின் நலனுக்காக நான் யார் காலில் வேண்டுமானால் விழ தயாராக உள்ளேன். எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு நல்லது, இல்லாவிட்டால் எனக்கொன்றும் பிரச்சினை கிடையாது உங்களுக்கு தான் எல்லாம் பிரச்சனையும்.
தன்னுடைய சொந்த கிராமமான பண்ருட்டி அருகிலுள்ள பத்திரக்கோட்டையில் உள்ள தன்னுடைய மாந்தோப்பில் பிரச்சாரம் செய்தார் அதில் பேசிய அவர் இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் கும்பலாக கூடிப் பேசி வாக்கு வாங்குவதை விட்டுவிட்டு தனித்தனியாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் நாம் ஈடுபட வேண்டும். அப்போது யாராவது உங்களை அவமதித்தால் என்னிடம் அடையாளம் காட்டுங்கள். அவர்களிடம் நான் பேசி கொள்கிறேன்.
கடந்த 15 வருடங்களாக நான் பாமகவுடன் தொடர்பில் இருக்கிறேன் சோஷியல் மீடியாவில் வாய் பிரச்சாரம் செய்வது மட்டுமே நம் நோக்கமாக இருக்கக் கூடாது.. வாக்காளர்களிடம் நேரில் சென்று பேசி வாக்கு வாங்கினால், அது பல லட்சம் வாக்குகளாக மாறும்.. நம்மை எதிர்த்து நிற்பவர்களை பற்றி கவலைப்படாதீங்க.. நம்முடைய வேலைய நாம செய்வோம் என தங்கர் பச்சான் பேசியுள்ளார்
பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், பாமக தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறி பலர் வெளியேறி விட்டனர். இப்போ வேணும் என்றால் அதிருப்தியாக இருக்கலாம் ஆனால் நாங்க வெற்றி பெற்ற பின் எங்களுக்கு திருப்தியாக இருக்கும். இதை நினைத்து பலர் வருத்தப்பட போகிறார்கள். அதைவிட முக்கியமாக, “உலக அளவில் திருக்குறள் பிரபலம் அடைய பிரதமர் மோடி ஒரு காரணமாக இருக்கிறார்” என தங்கர் பச்சான் கூறியபின் கடலூர் மக்களிடம் கோபம் அடைய வைத்திருப்பது குறிப்பிடதக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..