நாவல்பழத்தில் இவ்வளவு நன்மைகளா..!!
கோடைக்காலம் வந்தாலே நாவல் பழம் எட்டி பார்க்க ஆரம்பித்து விடும். ஆடி மாதம் வந்து விட்டால் நாவல் பழம் எல்லாம் இடத்திலும் விற்க தொடங்கி விடுவார்கள்.., புளிப்பு சுவை இல்லாத பழங்களில் நாவல்பழமும் ஒன்று.
நாவல்பழம் சுவைக்கு மட்டுமல்ல சில மருத்துவ குணங்களுக்கும் தான். அதில் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்.
* நாவல் பழத்தில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, மற்றும் வைட்டமின் பி6, ஆகிய சத்துக்கள் நிறைந்து இருக்கும்.
* நாவல் பழத்தில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்புகளை வலுவுற செய்கிறது.
* வாரத்திற்கு மூன்று முறை நாவல்பழம் எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோய் குணமாகும்.
* வாரத்திற்கு நான்கு முறை நாவல்பழம் எடுத்துக்கொண்டால், தோலின் சுருக்கங்கள் மறைந்து விடும்.
* வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணமாக்கும், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும்.
* கல்லீரலில் ஏற்படும் நோய்களை தடுக்கும்.
* பசியே எடுக்க வில்லை என புலம்புபவர்கள் நாவல்பழம் எடுத்துக்கொண்டால் பசி உணர்வு அதிகரிக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.